கிருஷ்ணகிரி (07 பிப் 2020): நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேனி CBCID அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவர், ஒரு மாணவி என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரியை சேர்ந்த பவித்ரன் என்பவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், சென்னை, தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த பவித்ரனை CBCID போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதனையடுத்து, பவித்ரன் தேனி ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.