சென்னை (13 ஜூன் 2020): தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனி. அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உள்ளது உறுதியானது. இதனையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பழனி நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#CoronaVirus தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக MLA திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) June 13, 2020
சென்ற வாரம் திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.