சென்னை (06 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சையில் பலனில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் விசாரிக்க சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர்களின் உடல் நிலை இருந்து வருகிறது. பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.