சென்னை (07 டிச 2022): சினிமா சூட்டிங்கின் போது ஒரு நபர் தன்னை தவறாக தொட்டதாகவும் அவரை கடுமையாக தாக்கியதாகவும் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி பிரபலமானார்.
தற்போது கடந்த வாரம் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் காமெடி கலக்கலாக வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையி ஒரு நேர்காணலின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது சினிமா சூட்டிங்கின் போது ஒரு நபர் தன்னை தவறாக தொட்டார் என்றும், உடனடியாக அவரை பிடித்து நாலு அடி விட்டேன். பெண்களுக்கு எப்போது இது போன்ற பிரச்சனைகள் முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், பெண்கள் அதற்காக பயந்து ஒதுங்க கூடாது. திருப்பி அடித்தால் தான் நம்மை தொடும் பயம் மோசமான ஆண்களின் மனதில் இருந்து நீங்கும் என பேசியுள்ளார்.