நாமதான் ஆட்சி அமைப்போம் – தேஜஸ்வி திட்டவட்டம்!

Share this News:

பாட்னா (10 நவ 2020): பீகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆட்சியே அமையும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

பீகாரில் 243 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பா.ஜனதா கூட்டணி – மகா கூட்டணிக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டது.

தொடக்கத்தில் மகா கூட்டணி முன்னணி பெற்றிருந்தது. தற்போது என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாக்கு மையம் அதிரிக்கப்பட்டதாலும், 80 வயதிற்கு மேற்பட்டோர் தபால் வாக்குகள் அளிக்க அனுமதி வழங்கப்பட்டதாலும் வாக்கு எண்ணிக்கை மெதுவாக நடக்கிறது.

மாலை 4 மணி நிலவரப்ப சுமார் 8 கோடி வாக்குகளில் 42 சதவீத வாக்குகள்தான் எண்ணப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். மற்ற அனைவரும் முன்னிலையில்தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நாம்தான் வெற்றி பெறும்வோம் என மகா கூட்டணியின் ராஷ்டீரிய ஜனதா தளம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஐந்து மணி நிலவரப்படி என்.டி.ஏ. கூட்டணி 124 இடங்களிலும், மகா கூட்டணி 109 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பெரும்பாலான தொகுதிகளில் 1000 மற்றும் 500 வாக்குகள் முன்னிலையில்தான் முதல் இடத்தில் உள்ள வேட்பாளர்கள் உள்ளனர்.


Share this News:

Leave a Reply