அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா பாஜக?

Share this News:

சென்னை இ(26 ஜூன் 2021): உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து பாஜக தலைமை முடிவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து எதிர்கொண்ட நிலையில் பாஜகவின் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “சில நேரங்களில் சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருக்கும். உள்ளாட்சித் தேர்தல் அப்படியல்ல. பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமை எப்போதும் கொள்கை முடிவு எடுப்போம். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும்” என்றார்.


Share this News:

Leave a Reply