புதுச்சேரி (29 மார்ச் 2022): மகன் வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு பாஜகவினர் முதியவர்களை தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் மனைவுயுடன் மளிகை கடை நடத்தி வருபவர் குமரேசன்(65), இவரது இரண்டாவது மகன் கணேஷ்குமார் செய்து வந்த தொழிலில் நஷ்டம் அடைந்தது .மேலும் கணேஷ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், அவர் கருவடிக்குப்பத்தில் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கொடுத்த பணத்தை அப்போது பிரகாஷ் கேட்டு வந்துள்ளார். ஆனால் பணம் இல்லாத காரணத்தினால் கணேஷ்குமார் தந்தை குமரேசன் அவகாசம் கோரி வந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் குமார் உட்பட 3 பேர் கடைக்கு சென்று குமரேசனை மற்றும் அவரது மனைவியை கொலை மிரட்டல் விடுத்ததோடு அவர்களை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானதை அடுத்து, அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, மேலும் இது குறித்து லாஸ்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.