அமித் ஷா பி.ஏ க்கு போன் செய்தால் உடனே மதக்கலவரம்தான் – பாஜக ரவுடியின் அடாவடி!

Share this News:

சென்னை (13 ஜன 2021): சிக்கன் ரைஸுக்காக மதக் கலவரம் செய்வோம் என்று பாஜகவினர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே மதத்தின் பெயரால் அடாவடி செய்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறது.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வலுவான அடித்தளம் இல்லாத நிலையில் எப்படியும் கட்சிக்கு ஆள் சேர்க்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ரவுடிகளை தங்கள் கட்சியில் இணைத்து வருகின்றனர்.

மத்தியில் பாஜக ஆள்கிறது என்கிற தைரியத்தில் ஆங்காங்கே சில உள்ளூர் பாஜகவினர் அடாவடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவல்லிக்கேனி பாஜக பகுதி முத்தையா தெருவில் ஒரு கடையில் பாஜகவை சேர்ந்த அப்பகுதி நிர்வாகி காசு கொடுக்காமல் சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் “திருவல்லிக்கேனி பாஜக பகுதி செயலாளர் நான், அமித் ஷா பி.ஏ,க்கு போன் போட்டுருவேன். 1000 பேர் ரெடியா இருக்காங்க, மதக் கலவரம் பண்ணிடுவோம்” என மிரட்டல் விடுக்கிறார்.

அவர் இவ்வாறு மிரட்டல்விடுப்பதை காவல் துறையினர் பார்த்தபடி நின்றிருந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கெனவே கோயம்புத்தூரில் ஒரு கலவரத்தின் போது அண்டா பிரியாணியை தூக்கிச் சென்றதாக பாஜக மீது சமூக வலைதளங்களில் ஒரு குற்றச்சாட்டு வலம் வருகிறது. இந்நிலையில் தற்போது சிக்கன் ரைஸுக்காக மதக் கலவரம் செய்வோம் என கூறும் வீடியோ வைரலா கியுள்ளது. மேலும் ‘ஓசி சிக்கன் ரைஸ் பாஜக’என்பதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply