பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை – காவல்துறையிடம் மனு!

Share this News:

திருப்பூர் (27 பிப் 2020): பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கோரி திருப்பூர் காவல் நிலையத்தில் பிரியாணி கடைக்காரர்கள் மனு அளித்துள்ளனர்.

சிஏஏ வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் திருப்பூரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெறவுள்ளது. பேரணியின்போது, பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு தர கோரி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, திருப்பூரிலும் அதேபோன்று நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்த மனுவை பிரியாணி கடைக்காரர்கள் அளித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply