நிறைவேற்று நிறைவேற்று தீர்மானம் நிறைவேற்று – ஸ்தம்பித்த தமிழகம்!

Share this News:

சென்னை (19 பிப் 2020): இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த போராட்டம் தடையை மீறி சட்டசபையை முற்றுகையிட முயற்சி செய்து போராடி வருகிறார்கள்.

இந்த சூழலில் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டங்களை நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.

இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக நடப்பு சட்டசபை கூட்டதொடரிலேயே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்புகின்றனர்.

முன்னதாக சென்னை வண்ணாராப்பேட்டையில் கடந்த ஆறு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதேபோல் திருச்சி, நீலகிரி, மதுரை, நெல்லை, வேலூர், சேலம் என அனைத்து ஊர்களிலும் கடந்த 15ம் தேதி முதல் போராட்டஙகள் நடந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *