தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக பொதுமக்கள் தொடர் போராட்டம்!

Share this News:

சென்னை (15 பிப் 2020): சிஏஏ வை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பெண்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியை போல் சென்னையில் ஷஹீன் பாக் என்ற பெயரில் பெண்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேபோல திருவாரூரில் நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், அடியக்கமங்கலம் உள்ளிட்ட ஊர்களிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கோட்டக்குப்பம், மற்றும் செங்கல்பட்டில் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டங்களில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply