அதிராம்பட்டினம் (19 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஷாஹீன் பாக் மாடலில் அதிராம்பட்டினத்திலும் தொடர் போராட்டம் தொடங்கியது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை பின்பற்றி, தொடர் போராட்டம் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாநிலம் தழுவிய மாபெரும் அமைதி பேரணி சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் ஷஹீன் பாக் மாடல் தொடர் போராட்டம் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் தொடர் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிட்டு வருகின்றனர். .