சென்னை (02 ஜூன் 2020): சென்னை ஆவின் பால்பண்ணை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று சென்னையில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணையில் பணிபுரிந்து வந்த அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.