சென்னையில் ஷஹீன் பாக் – மீடியா ஒன் தொலைக்காட்சியின் முழு கவரேஜ் – VIDEO

Share this News:

சென்னை (16 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை டெல்லி ஷஹீன் பாக்காக மாறியுள்ள நிலையில் சனிக்கிழமை போராட்டக் களத்தை நேர்மையாக செய்தி தந்துள்ளது மலையாள சேனலான மீடியா ஒன் தொலைக்காட்சி.

குறிப்பாக பெரும்பாலான எதிர் கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. குறிப்பாக கட்சி, மத பேதமின்றி அதிமுக, பாஜக தவிர அனைத்து சமூகத்தினரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை இப்போராட்டக் களம் காட்டுகின்றது.

தமிழக சட்டமன்றத்தில் கேரளா, பஞ்சாபைப் போன்று குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாதவரை இபோராட்டம் தொடரும் என்பதாகவே பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வீடியோ

வெள்ளிக்கிழமை இரவு பொதுமக்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியபோதும், துணிச்சலுடன் பெண்களும் தொடர்ந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் இப்போராட்டம் மேலும் வீரியமடையும் என்பதை காட்டுகின்றது.


Share this News:

Leave a Reply