சென்னை(18 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டசபையில் சபாநாயகர் அறிவித்ததை அடுத்து சென்னை ஷஹீன் பாக் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை (சென்னை ஷஹீன் பாக்) தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என மத பேதமின்றி பலரும் இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துசார் காந்தியும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக் கோரினர் ஆனால் சபாநாயகர், “தீர்மானம் நிறைவேற்ற முடியாது” என்று அறிவித்ததை அடுத்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இது இப்படியிருக்க போராட்டம் மேலும் தீரிவரம் அடைந்துள்ளது. மேலும் நாளை 19 ஆம் தேதி சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தையும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது, அதேபோல மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர் இதனால் போராட்டம் மேலும் வீரியம் அடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.