காஞ்சிபுரம் (22 ஜூன் 2021): காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி முதல் 19ம் தேதி வரைக்கும் ஒரு வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 258 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதா. அம்மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
கொரோனா முதல் அலையில் 50 வயதுக்கும் மேல் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலையில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகம் பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒரு வயது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று அதிகம் உறுதியாகி வருகிறது.
இதனால் இது மூன்றாவது அலைக்கான அறிகுறியாக இருக்குமோ என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே பெற்றோர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே குழந்தைகள் பாதிக்கப்படாமல் தடுக்கலாம் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.