சென்னை (27 ஜன 2020): சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையம் நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ரிச்சி தெருவில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேனா விநியோகிக்கப் பட்டதில் அதனை தடுத்தது காரணமாக 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திலும் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் தற்போது அங்கு பரபரப்பு நிலவுகிறது.