அதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே?

Share this News:

சென்னை (12 ஆக 2020): சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன.,

பலர் தங்களது கட்சிகளிலிருந்து அடுத்த கட்சிகளுக்கு தாவ தொடங்கிவிட்டனர். அதில் குறிப்பாக அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு பாய்ந்த நயினார் நாகேந்திரன்தான் இப்போது டைம் லைனில் உள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு நவாஸ் கனியிடம் தோல்வியை சந்தித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர் பார்த்து காய் நகர்த்திய நயினாருக்கு அது கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க.வுக்குள் நயினாரை இழுக்க மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனை அறிந்த தமிழக பாஜக தலைவர் முருகன், நெல்லை சென்று நயினாரை அமைதிப் படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். எனினும் நயினார் சமாதானமாகவில்லை எனத் தெரிகிறது.

இதற்கிடையே எடப்பாடியாரும் தாய்க்கழகமான அதிமுகவுக்கே வந்துவிட நயினாருக்கு தூது அனுப்பியுள்ளார்..

இதனை ஜீரணிக்க முடியாத. முருகன், இதுகுறித்து டெல்லிக்கு தகவல் அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் தமிழக பாஜகவினர் சிலரோ, முருகன் ஒரு சாராரை மட்டும் திருப்தி படுத்தும் வகையில் நிர்வாகிகளை நியமிக்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.. நிர்வாகிகள் நியமனத்திலேயே இதனைக் கவனிக்க முடியும். இதனால் கட்சிக்குள் அதிருப்திகள் அதிகரித்து வருகிறது. என்கின்றனர்.

இதனை தனக்கு சாதகமாக்க அதிமுக துடிக்கிறது. இதனை வைத்து அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு பாய்ந்தவர்களை மீண்டும் அதிமுகவுக்குள் இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பாஜகவுக்கு உழைத்து எந்த பதவியும் இல்லாமல் இருப்பவர்களையும் இழுக்க அதிமுகவும் திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்வதாகவும் தகவல்.

போதாதற்கு பாஜகவில் புகுந்து குட்டையை குழப்புவதாக தமிழக பாஜகவினர் எடப்பாடி மீது கடுங் கோபத்தில் உள்ளனர்.

ஆனால் டெல்லியில் நட்பு, மாநிலத்தில் கட்சியை விட்டுக் கொடுக்காமல் செயல்படுவதே அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது என்று எடப்பாடி விரும்புவதாகவும் அதனை கவனத்தில் கொண்டே இனி நடவடிக்கைகள் இருக்கும் என்பதாகவும் அதிமுக தரப்பினர் முனுமுனுக்கின்றனர்.


Share this News:

Leave a Reply