வீட்டில் இருக்க முடியாவிட்டால் சிறையில் இருக்க நேரிடும் – புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை!

Share this News:

புதுச்சேரி (24 மார்ச் 2020): ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டில் இருக்காமல் வெளியில் சுற்றினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

உலகில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையே 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவிக்கையில், ” கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.” என்றார்.


Share this News:

Leave a Reply