முதல்வர் ஸ்டாலினின் கொரோனா கால அடுத்த அதிரடி!

Share this News:

சென்னை (08 ஜூன் 2021): சமீபத்தில், அத்தியாவசியப் பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம் (1986)-ன் கீழ் கொரோனா மருத்துவப் பொருள்களின் விலையை, கேரள முதல்வர் பினராயி விஜயன் நிர்ணயம் செய்திருந்தார்.

அதன்படி, பிபிஇ கிட் – ரூ. 273, என்95 முகக் கவசம் – ரூ.22, மூன்று அடுக்கு முகக் கவசம் – ரூ.3.90, சானிடைசர் 100 மி.லி. ரூ.55 என்ற அளவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தமிழ் நாட்டு அரசின் அறிவிப்பின்படி இப்போது இருப்பதிலேயே, விலை உயர்ந்த மற்றும் தரமான மாஸ்க் வகையான என்-95 மாஸ்க்களை அதிகபட்சம் 22 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக் கூடாது என்று கூறியுள்ளது .

பிபிஇ கிட் எனப்படும் கவச உடை விலை ரூ.273 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது சில மருத்துவமனைகளில் நர்சுகள், டாக்டர்களுக்கு பிபிஇ கிட் அணியும் கட்டணத்தை நோயாளியிடமிருந்து வசூலிப்பதை பார்க்க முடிகிறது. ரூ.700லிருந்து பிபிஇ கிட் கட்டணத்தை மருத்துவமனைகள் நிர்ணயிப்பதை பார்க்க முடிகிறது.

இதேபோல கைகளை சுத்தப்படுத்த பயன்படும், சானிடைசர் 200 மி.லி. விலை அதிகபட்சம் 110 ரூபாயாக இருக்க வேண்டும் என தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்றடுக்கு கொண்ட சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று தரத்திற்கு ஏற்ப, அதிகபட்சம் ரூ.4.50க்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *