பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது பாஜக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

Share this News:

சென்னை (10 டிச 2022): தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அக்கட்சியின் நிர்வாகி மீஞ்சூர் சலீம் கபடி லீக் போட்டிகளில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. அண்ணாமலைக்கு மிக நெருக்கமான இவர், பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்கிற குற்றச்சாட்டும் அமர் பிரசாத் ரெட்டி மீது உண்டு.

இந்நிலையில் தமிழக பாஜக சார்பில் கபடி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் கிராமங்களில் ஊடுருவ முடியும் என்பது பாஜகவின் கணக்கு. இந்த கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அமர் பிரசாத் ரெட்டியுடன் இணைந்து செய்து வந்தனர் பாலாஜி தங்கவேல் உள்ளிட்டோர். ஆனால் அமர் பிரசாத் ரெட்டியின் நடவடிக்கையில் உடன்படாத பாலாஜி தங்கவேல் பாஜகவின் இளைஞர் விளையாட்டு பிரிவு துணை தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது இப்படியிருக்க கபடி லீக் போட்டிகள் மூலம் அமர் பிரசாத் ரெட்டி பணத்தை சுருட்டி விட்டார் என பாஜக ஆதரவாளர் மீஞ்சூர் சலீம் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் தமது ட்விட்டர் பக்கத்தில் அமர் பிரசாத் ரெட்டி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் மீஞ்சூர் சலீம் முன்வைத்தும் வருகிறார்.


Share this News:

Leave a Reply