ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ரமலான் உணவு மற்றும் கொரோனா பேரிடர் உதவி!

Share this News:

தஞ்சாவூர் (10 மே 2020): தமிழகத்தில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வாடும் மக்களுக்கு ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ரூ 18 லட்சம் மதிப்பிலான கொரோனா பேரிடர் மற்ரும் ரமலான் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.

சவூதி அரேபியா ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றம் தாயகத்தின் தன்னார்வல தொண்டு நிறுவனங்களான தஞ்சை அனைத்து லயன்ஸ் சங்கங்கள், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், அமீரகத் தமிழர்கள் மறுமலர்ச்சிப் பேரவை – அமீரகம், ஏ.எம்.சி – எம்.சி.ஏ’94 நண்பர்கள் குழு, வெளிநாட்டு வாழ் தமிழர்கள், திருச்சி அன்னை ஃபாத்திமா மருத்துவமனை, தஞ்சை ஐயா உணவுகள் பிரைவேட் லிமிடெட், மஹாராஜா சில்க் ஹவுஸ் தஞ்சாவூர் & இராமநாதபுரம், குடும்ப நண்பர்கள் குழு மற்றும் குடும்ப உறவுகள் சார்பில் தஞ்சைப் பகுதிகளில் இதுவரை 18 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளனர்.

கரந்தை மகளிர் பள்ளியில் 46 துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.1050 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள வசந்தம் லயன்ஸ் சங்கத் தலைவர் அன்பழகன், மாவட்ட கல்வி அலுவலர் திரு.ராமகிருஷ்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சியரிடம் முறையாகஅனுமதி பெற்று, இந்த உதவிகள் செய்யபட்டதாக லயன் ஸ்டாலின் பீட்டர் பாபு தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பாக வட இந்தியாவிலிருந்து இங்கு பணிக்கு வந்து வருமாணமின்றி தவிக்கும் குடும்பங்களுக்கு நாள்தோறும் சுமார் 100 சாப்பாடுகள் வழங்கி வருவதோடு, நெய்வாசல், ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு தினமும் 180 பேருக்கு உனவும் கொடுப்பதோடு, இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பணியாளர்களுக்கு தினமும் 150 தேநீரும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காலை நேரத்தில் நீர் மோரும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து லயன்ஸ் பாபு தெரிவிக்கையில், இதுவரை 850 குடும்பங்களுக்கு ரூ.1050 மதிப்பிலான உணவு பொருள்கள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டை இல்லாதவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள், திருநங்கைகள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மிகுந்த நலிவுற்றோர், சாலையோர குடிசைவாசிகள், சிறு குழந்தைகள் காப்பகம், நலிந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், கிராமபுறத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்படோர், மற்றும் வேலையிழந்து மிகவும் நொடித்து போனவர்களுக்கு கடந்த 45 நாட்களாக வழங்கி வருகிறோம்.

மேலும் 3000 முகக் கவசங்கள், களப்பணியாளர்களுக்கு 650 தொப்பிகளும், 100 பாட்டில் சானிடைஸர்ஸ் வழங்கியதோடு இந்த ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை இஸ்லாமிய மக்கள் உள்ளிட நோன்பு வைக்கின்ற சுமார் 250 நபர்களுக்கு நோன்பிற்கான அதிகாலை ஸஹர் உணவுகளையும் தொடர்ந்து சுகாதாரமாக சமைத்து தரமான உணவுகளை வழங்கி வருகிறோம்.

இந்த சேவைகளுக்கு வழிகாட்டியாக இருந்து ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் தஞ்சை நட்புநாயகன் முன்னாள் ஆளுநர் முகம்மது ரபி அவர்கள் உறுதுணையாக உள்ளதாகவும், மேலும் இச்சேவைகள் வருகின்ற மே 25 வரை தொடரும் என்றும் தெரிவித்தார்.

இந்த இரண்டு மாத சேவைகளை சேவையாளர்களை ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் லயன் ஜாகிர் உசேனுடன் ஒருங்கிணைத்து மற்றும் அனைத்து பயனாளிகளும் பயன் பெறும் விதம், மிகச்சிறப்பாக பணி செய்து வருகின்ற லயன் அமல். ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்களை அரசு அதிகாரிகளும், லயன்ஸ் இயக்க தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

தகவல்: லயன் ஜாஹீர் உசேன் (ஜித்தா முத்தமிழ் சங்கம்)


Share this News: