வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க – முதல்வர் எச்சரிக்கை!

Share this News:

சென்னை (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதையும் அடுத்த 15 நாள்களுக்கு பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.

வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த நபா்கள் கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தனிநபா் சுகாதாரத்தைப் பேணுவதுடன், வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்யவேண்டும். கைகளைச் சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொடுவதைத் தவிா்க்க வேண்டும்.

விடுமுறை நாள்களின்போது குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வதையும் பெற்றோா் உறுதி செய்யவேண்டும்.

காரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அறிகுறி உள்ளவா்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் முதல்வா் கேட்டுக்கொண்டுள்ளாா்.


Share this News:

Leave a Reply