சென்னை (03 மே 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,341 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 203 பேரை கொரோனா தாக்கியுள்ளது.
இது இப்படியிருக்க சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இது சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.