சென்னை (26 மே 2020): நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் ஆதரவற்றோர் ஆஸ்ரமத்தில் 20 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை அசோக் நகரில் ஆதரவற்றோர் ஆஸ்ரமம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தற்போது சென்னை லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ளனர்.