தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மரணம்!

Share this News:

விழுப்புரம் (04 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்காக இரண்டாவதாக ஒருவர் பலியாகியுள்ளார்.

விழுப்புரம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த 51 வயது ஆண் கொரோனா தொற்று காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலையில் அவர் உயிரிழந்தார். மேலும் பலியானவர் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையி மற்றொருவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததன் மூலம் தமிழகத்தி கொரோனாவுக்கு 2 வது நபர் பலியாகியுள்ளார்.


Share this News:

Leave a Reply