தஞ்சையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!

Share this News:

தஞ்சாவூர் (21 மார்ச் 2021): தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 168-ஆக உயர்ந்துள்ளது.


Share this News:

Leave a Reply