தடுப்பூசியால் கொரோனாவை ஒழிக்க முடியாது – லண்டன் நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

Share this News:

லண்டன் (22 அக் 2020): தடுப்பூசியால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது 4 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.70 லட்சத்தினை தாண்டியது. தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் எட்மண்ட் கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் தொற்று பாதிப்பு வாய்ப்புகள் குறைக்கப்பட வேண்டும் அப்போதுதான் தடுப்பூசியை பரவலாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். தடுப்பூசி கிடைத்தால் எல்லோருக்கும் உடனடியாக அது சென்று சேரும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 44,000க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply