சென்னை (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு ஏப்ரல் 1-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன் சிறப்பம்சங்கள்:
26-ஆம் தேதி நடைபெறவிருந்த 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 24-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு இடையே கால் டாக்ஸிகள் இயங்க அனுமதி
ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்க அனுமதி
வங்கிகள், ஏடிஎம் மையங்கள் செயல்படும்
உணவகங்களில் உணவைப் பார்செல் வாங்கிச் செல்ல அனுமதி.
உணவகத்தில் இருந்து உணவருந்தத் தடை.
டீ கடைகளில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை.
ஸ்விகி, ஸொமேட்டோ, உபெர் ஈட்ஸ் போன்ற சேவைகள் ரத்து
அம்மா உணவகங்கள் செயல்படும்
ஆவின் பால் விற்பனை நிலையங்கள் செயல்படும்
பால், மளிகை மற்றும் இறைச்சி கடைகளுக்கு அனுமதி
பெட்ரோல் பங்குகள் செயல்படும்
மருத்துவ உபகரணங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதி
சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியர்களைக் கொண்டு நிறுவனங்களை நடத்த அனுமதி
பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், நூலகங்கள், பூங்காக்கள், சுற்றுலாப் பகுதிகள் உள்ளிட்டவைக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபட தடை.
மார்ச் 16 அல்லது அதற்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மட்டுமே நடைபெற அனுமதி. அதுவும் அதிகபட்சம் 30 நபர்களைக் கொண்டு மட்டுமே நடத்த அனுமதி.
ரத்து செய்யப்பட்ட அனைத்து திருமண பதிவுகளின் முன்பணத்தையும் திருமண மண்டபங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும்.