இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை!

Share this News:

சென்னை (14 மார்ச் 2020):சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

குடியுரிமை சட்டத்திருத்தம், என்.ஆர்.சி, என்பிஆர் தொடர்பாக சிறுபான்மை சமூகத்தினரிடையே நிலவும் சந்தேகங்களை களைவது பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் விவாதித்து வருகின்றனர்.

நேற்று குடியுரிமை சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தலைமை செயலாளர் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டி தலைமை செயலாளருக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் 49 இஸ்லாமிய  அமைப்புகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply