சென்னை (22 மார்ச் 2021): தமிழகத்தில் தேத்தல் களம் கலைக்கட்டியுள்ள நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பூவுக்கு எதிராக பலவிதமான வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து குஷ்பூ தெரிவிக்கையில் “என்னை வெளிமாநிலத்தை சேர்ந்தவள் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் வெளிமாநிலத்தை சேர்ந்தவள்தான், ஆனால் இந்தியாவில் பிறந்தவள் ‘இந்திய பிரஜை’. 35 ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன், தமிழ் மண் மீது எனக்கும் உரிமை உண்டு என தெரிவித்தார்.
அப்போது பாஜக மாநில வழக்கறிஞகள் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை மாநகரின் முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் உடன் இருந்தனர்.