தஞ்சை (29 மே 2020): திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் உதவிய பொதுமக்கள் குறித்த விவரங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவை சந்தித்து திமுக மாவட்ட நிர்வாகிகள் அளித்தனர்.
பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசே செய்துவிட்டதாகவும், தி.மு.க பொய் பிரச்சாரம் செய்வதாகவும், அ.தி.மு.க. அரசின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசியிருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் திரு.ஸ்டாலினின் “ஒன்றிணைவோம் வா” உதவி கோரும் எண்ணிற்கு, வந்த அழைப்பின் படி தஞ்சை மாவட்டத்தில் உதவி கோரிய சுமார் 18,800 பொதுமக்களின் விபரங்களை, ஸ்டாலின் உத்தரவுபடி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
இவற்றை தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் சு.கல்யாணசுந்தரம், தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் துரை.சந்திரசேகரன் MLA., ஆகியோரது தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மு.சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.இராமச்சந்திரன், சாக்கோட்டை க.அன்பழகன், கோவி.செழியன், ஆகியோர் ஒன்றிணைந்து, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.