சென்னை (13 ஏப் 2020): சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 60 வயது மருத்துவர் ஒருவர் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த மருத்துவரின் உடலை தகனம் செய்ய அம்பத்தூர் மயானத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு மயானத்தில் மருத்துவரின் உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.