சென்னை (08 ஏப் 2021): திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இ தையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார். எனினும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.