சென்னை (22 மே 2020): விமான சேவையை இப்போதைக்கு தொடங்க வேண்டாம் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்றுமுன்தினம் அறிவித்தார்.
இதன்படி, வரும் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வரும் 25 ஆம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என பிரதமருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.