சென்னை (17 மார்ச் 2021): இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களோடு இன்று ஆலோசிக்கிறார்.
இந்தநிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் இருப்பதால், பிரதமருடனான ஆலோசனையில் அவர் பங்கேற்கமாட்டார் எனவும், அவருக்குப் பதிலாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பங்கேற்பார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன
அதேபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதால், பிரதமருடனான ஆலோசனையில் மம்தா கலந்துகொள்ளமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.