அதிமுக முன்னாள் எம்.பி கைது!

Share this News:

கோவை (25 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவைச் சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைதான பழனிசாமி விசாரணை மேற்கொள்ள கே.சி.பழனிசாமி சூலூர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Share this News:

Leave a Reply