போலி நர்ஸ் ஊசி போட்டதால் சிறுவன் பலி!

Share this News:

ராஜபாளையம் (09 நவ 2022): ராஜபாளையத்தில், ஆக்னெஸ்ட் கேதரின் என்ற போலி செவிலியர், தனதேவநாதன் என்ற சிறுவனுக்கு காய்ச்சலுக்கு ஊசிபோட்டதால் அச்சிறுவன் இறந்துள்ளார்.

6 வயது சிறுவனான தனதேவநாதனுக்கு அலோபதி வைத்தியம் பார்த்து ஊசி போட்டதை ஒப்புக்கொண்ட ஆக்னெஸ்ட் கேதரின் வீட்டை சோதனையிட்ட போது, அலோபதி மருந்துகள், மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல் அளித்த புகாரின் பேரில் ஆக்னெஸ்ட் கேதரின் கைது செய்யப்பட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply