மாதவரம் (29 பிப் 2020): மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தால் வெளியாகக் கூடிய புகை மற்றும் வெப்பத்தால் தீயணைப்பு வீரர்களும் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர வேறு பொதுமக்களும் எதிர்பாராமல் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அங்கு அவசர சிகிச்சைக்காக 5 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருவதால், இன்னும் பல மணி நேரம் போராட்டம் தொடரும் என்று தான் தெரிகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.