முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவை விட்டு விலகல்!

Share this News:

மும்பை (18 நவ 2020): மகாராஷ்டிராவில் தலைவர் ஏக்நாத் காட்ஸேவுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய் சிங் ராவ் கெய்க்வாட் பாட்டீல் இன்று பாஜகவிலிருந்து விலகியுள்ளார்

மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் செவ்வாய்க்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அவர் கட்சிக்காக பணியாற்ற தயாராக இருக்கிறார், ஆனால் கட்சியில் அவருக்கு மரியாதை இல்லை என்பதாகவும் எனவே நான் ராஜினாமா செய்கிறேன். ‘ ஜெய்சிங் ராவ் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கட்சித் தலைமை பத்து ஆண்டுகளாக அவரை புறக்கணித்து வருவதாக அவர் கூறினார். நான் எம்.எல்.ஏ அல்லது எம்.பி. ஆக இருக்க விரும்பவில்லை. கட்சியை வலுப்படுத்த நான் பணியாற்ற விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு பொறுப்பை எனக்கு வழங்குமாறு கேட்டேன் . ஆனால் கட்சி எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. மாநிலத்தில் கட்சியை வளர்க்க கடுமையாக உழைத்தவர்கள் கட்சிக்கு தேவையில்லை, என்பாதை பாஜக உணர்கிறது” என்கிறார் .


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *