பாட்னா (18 நவ 2020): பீகாரில் குல்நாஸ் காத்தூன் என்ற முஸ்லீம் இளம் பெண் இந்து இளைஞரால் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை சதிஷ் குமார் ராய் என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணுக்கு வேறொரு
ஆனால் அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் சத்திஷ் குமார் மற்றும்,அவரது தந்தை வினய் மற்றும் உறவினர் சகோதரர் சந்தன் ஆகியோர் அந்த பெண்ணை உயிருடன் எரித்துள்ளனர். படுகாயம் அடைந்த கல்தூண் பாட்னா மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி கல்தூண் பரிதாபமாக உயிரிழந்தார்.
குல்னாஸ் கல்தூனின் மரண வாக்குமூலத்தில் சத்திஷ் குமார் மற்றும்,அவரது தந்தை வினய் மற்றும் உறவினர் சந்தன் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் திரை பிரபலங்கள் கங்கனா ராவத், ஊர்மிளா உள்ளிட்டவர்கள் பெண்ணுக்கு நீதி வேண்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்