சென்னை (28 நவ 2021): முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நெய்வேலியை சேர்ந்த பொறியாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் அளித்த புகாரின் பேரில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி மணி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவரைப்பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்த மணியை தனிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.