சென்னை (02 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் விதமாக ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எதிர் கட்சிகளிடையே இப்போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது.
இது இப்படியிருக்க க த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இப்போராட்டம் குறித்து கூறுகையில் “எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுகிறது.
குறுகியகால நன்மையை கூறி விவசாயிகளின் வருங்கால தொடர் வளர்ச்சி, வருமானத்தை திசை திருப்ப கூடாது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தால் அப்பாவி விவசாயிகள் பலியாகக்கூடும்.” என்று தெரிவித்துள்ளார்.