சென்னை (01 ஜூலை 2020): சென்ற மாதத்தில் உயர்த்தப்பட்டது போன்று இந்த மாதமும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. உயர்வு விலை வருமாறு:
சென்னை – நான்கு ரூபாய் உயர்வு
டெல்லி – ஒரு ரூபாய் உயர்வு
கொல்கத்தா – நான்கு ரூபாய் ஐம்பது பைசா உயர்வு
மும்பை – மூன்று ரூபாய் ஐம்பது பைசா உயர்வு
இந்த விலை உயர்வு 01.07.2020 முதல் நடைமுறைக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே பல்வேறு துன்பத்திற்குள்ளாகி இருக்கும் பொது மக்களுக்கு இந்த விலை உயர்வு எரிகிற நெருப்பில் சிலிண்டரை போட்டதை போல் இருக்கும்.