துபாய் ஹோட்டலில் சந்தித்த நபர் – அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

Share this News:

சென்னை (14 டிச 2022): துபாய் ஹோட்டலில் நான் சந்தித்ததாக கூறப்படும் நபர் குறித்து அண்ணமலை பதிலளிப்பார் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

திருச்சி சூர்யா – டெய்சி ஆபாச ஆடியோ விவகாரத்தில் பாஜகவிலிருந்து 6 மாதம் நீக்கப்பட்டுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். தற்போது பாஜக குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார் காயத்ரி ரகுராம்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் காயத்ரி ரகுராம், “முதலில் நான் சென்னை சோமர்செட் ஓட்டலில் சந்தித்ததாக தவறான முறையில் சொல்லி எண்ணை குறிவைத்து விமர்சித்தார்கள்.

தற்போது நான் துபாய் ஓட்டலில் யாரை சந்தித்தேன் என்று கேட்கிறார்கள். இதற்கு அண்ணாமலை பதிலளிப்பார். நான் அமைதியாக இருக்கப்போகிறேன்.

இப்போது எனக்கு ஏராளமான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எனக்கு ஆலோசனை வழங்க இருக்கிறார்கள். அதற்கு காரணம், தங்களின் குடும்ப பெண்களை பற்றி அண்ணாமலை அவர்கள் எதுவும் பேசவில்லை. அண்ணாமலை எனது பெயரை எங்கும் பயன்படுத்தவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், அவர் 150 பேர் குழுமி இருந்த கூட்டத்தில் எனது பெயரை அவர் பயன்படுத்தினார். அண்ணாமலை ஏன் அவ்வாறு பேசினார்? எந்த அடிப்படையில் அப்படி பேசினார்? என்று நான் அவரிடம் கேள்வி எழுப்பப்போவது கிடையாது. எனது வேண்டுகோள் என்னவென்றால், என் சார்பாக மக்களுக்கு எனது மாநில தலைவர் அண்ணாமலை பதிலளிக்க வேண்டும்.” என பதிவிட்டு உள்ளார்.


Share this News:

Leave a Reply