சென்னை (14 பிப் 2020): சீமான் மற்றும் ஹுமாயுன் ஆகியோரை கோவிலுக்குள் அனுமதித்தது எப்படி? என்று பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில், கடந்த 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று மாலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவிலுக்கு வந்தார். நேராக கருவறையில் அமர்ந்து தரிசனம் செய்து, மாலை மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். அதன் பின், அவர் சுவாமி தரிசனம் செய்யும் போட்டோக்களை, தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள எச்.ராஜா, ‘சிலை வழிபாட்டை (சிர்க் ஒழிப்பு) ஒழிக்கத் துடிக்கும், ஹுமாயூன் (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோரை தஞ்சை பெருவுடையார் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டது எப்படி? இந்து அல்லாதவர், இந்துமத சின்னம் அணியாதவரை கோவிலுக்குள் அனுமதித்த அறநிலையத்துறை அதிகாரியின் மீது உடனடி நடவடிக்கை தேவை’ என பதிவிட்டுள்ளார்.