சென்னை (12 ஏப் 2021): சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக இளைஞர்கள் மீது போலீசார் பதிவு செய்த எப் ஐ ஆரை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
ஜாபர் சாதிக் என்பவர் மீதும் ஒரு சில இளைஞர்கள் மீதும் சி ஏஏ போராட்டத்தின்போது பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்தியதாகவும் , சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் கன்னியாகுமரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் சாதிக் உள்ளிட்டவர்கள் மீது புகார் செய்தார்.
இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். ஹேமலதா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, போராட்டம் அமைதியான வழியில் நடந்ததாகவும், புகாரில் கூறப்பட்டுள்ளபடி எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்றும் கூறிய நீதிபதி, ஜாபர் சாதிக் உள்ளிட்ட இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.