பிரபல நடிகைக்கு அதிமுகவில் முக்கிய பதவி!

Share this News:

சென்னை (26 ஜூலை 2020): பிரபல நடிகை விந்தியாவுக்கு அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த பாப்புலர் வி.முத்தையா, தென்சென்னை வடக்கு மாவட்டம் தியாகராயர் நகரைச் சேர்ந்த நடிகை விந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளராக VPB பரமசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.” என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ளவர்கள் அல்லாமல் இவர்கள் அனைவரும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *