சென்னை (26 ஜூலை 2020): சென்னையில் கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சென்னையில் 63% கொரோனா மரணங்களை எடப்பாடி பழனிசாமி அரசு மறைத்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் “கட்டமைப்பு வசதி இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை அரசு மறைத்திருக்கிறதோ?” எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மரணக்கணக்கில் உள்ள தவறுகளை திருத்த ஏற்கனவே 39 கமிட்டி உள்ள நிலையில் மேலும் ஒரு கமிட்டி எதற்கு எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.