திமுக மீது முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி!

Share this News:

சென்னை (02 ஜன 2021): அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் ஆசாதுதீன் ஒவைசியை அழைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில், திமுகவின் முடிவு குறித்து அதன் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் அதிருப்தி அடைந்துள்ளது.

லீக்கைத் தவிர,திமுக ஏ கூட்டணியில் உள்ள இதர முஸ்லிம் கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவைசி மற்றும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. மேலும் அதே நாளில் திமுக மாநாட்டிலும் ஒவைசி கலந்து கொள்வார் என்று திமுக சிறுபான்மை விவகாரங்களுக்கான கட்சி செயலாளர் டாக்டர். டி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையிலும் போட்டியிடுவதாக AIMIM முன்னர் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க ஒவைசி சென்னைக்கு வருவார் என்றும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது


Share this News:

Leave a Reply